வியாழன், 19 நவம்பர், 2009

கொத்துகறி கோலா உருண்டை

already seen this







தேவையானவை :

கொத்துகறி - 1/2 கிலோ

துருவிய தேங்காய் - 2 கோப்பைகள்

பொட்டுக்கடலை -- 100 கிராம்

சின்ன வெங்காயம் -- 15

இஞ்சி -- 1 அங்குலம்

பூண்டு -- 6 அல்லது 7 பல்கள்

பட்டை -- 1 அங்குலம்

கிராம்பு -- 3 அல்லது 4

ஏலக்காய் -- 2

கல்பாசி - சிறிதளவு

பச்சைமிளகாய் -- 2

மிளகாய்த் தூள் -- 3 தேக்கரண்டி

எலுமிச்சை பழம் -- 1

மஞ்சள் தூள் -- 1/2 தேக்கரண்டி

எண்ணெய் -- 2 கோப்பைகள்

முட்டை -- 1

உப்பு -- தேவைக்கேற்ப


செய்முறை :

கறியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து தனியே வைக்கவும் . சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கவும் . அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும் . அதில் தேங்காய் , பச்சைமிளகாய் , பட்டை , கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , இஞ்சி , பூண்டு இவை அனைத்தையும் நன்றாக வதக்கவேண்டும் . பின்னர் சின்ன வெங்காயத்தையும் , பொட்டுக்கடலையையும் தனித்தனியே வதக்கவேண்டும் . இத்துடன் கரியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும் . நன்கு மசிந்தவுடன் எடுத்து அதனுடன் உப்பு , மிளகாய்த் தூள் , மஞ்சள் தூள் , எலுமிச்சை சாறு , முட்டை இவற்றை சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள் .

9 கருத்துகள்:

Admin சொன்னது…

நல்ல சுவையாக இருக்கும் போல தெரிகிறது.

Aruna Manikandan சொன்னது…

Hi Malarvizhi,

First time here.......
U have got a wonderul space..

Check my space when u find time

with luv,
ArunaManikandan
http: // ensamayalkuripugal.blogspot.com

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்லாயிருக்கு,.. செய்துப்பார்க்கலாம்.. என்னுடைய மற்றொரு தளத்திற்கும் வந்து செல்லுங்கள்

http://aammaappa.blogspot.com/

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அப்பரம் அந்த Word verification ஐ எடுத்துவிடுங்கள் பின்னூட்டம் இடுபவர்களுக்கு சிறமம் இல்லாமல் இருக்கும்

priya சொன்னது…

hi,

Thk u so much for visiting my blog!...your recipes look so delicious...glad to follow you...you look so young and beautiful!..do keep in touch!

Menaga Sathia சொன்னது…

எனக்கு பிடித்த உருண்டை,சூப்பராயிருக்கு...

my kitchen சொன்னது…

looks really good,want to try

my kitchen சொன்னது…

Following you

gtyuk சொன்னது…

kothukari urundai russiyaa irukku!!! no wonder children love it!!!! thank you for the recipe!!!