புதன், 3 செப்டம்பர், 2014

முட்டை குழம்பு

already seen this







சின்ன வெங்காயம் -1/2 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன் 
பூண்டு - 4 அல்லது 5 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
முட்டை - 5 அல்லது 6

தேங்காய் துருவலை மிக்ஸியில் நன்கு மசிய அரைத்து பின் அதனுடன் 5 சின்ன வெங்காயம் , 5 பூண்டு பல் சேர்த்து ஒன்றுக்கு பாதியாக அரைத்து எடுக்கவும்.
பின்பு அந்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் புளி கரைத்து அதன் சாறு சேர்க்கவும்....அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணை சேர்த்து ,அது காய்ந்ததும் கறிவடகம் சேர்க்கவும்..பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கலந்து வைத்துள்ள புளி கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.மற்றொரு அடுப்பில் ஒரு சிறு கைப்பிடி உள்ள கடாயில் சிறிது எண்ணை விட்டு அதில் ஒரு முட்டை ஊற்றி வேக விடவும்.லேசாக வெந்ததும் மெதுவாக அந்த முட்டையை குழம்பில் சேர்க்கவும்.இப்படி ஒவ்வொரு முட்டையும் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

காய்கறிகள் கலந்த சப்பாத்தி

already seen this










பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் , முட்டைகோஸ், காரட், வேக வைத்து லேசாக மசித்த பச்சை பட்டாணி ,பீன்ஸ்,உருளைக்கிழங்கு இப்படி எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.அனைத்து காய்கறிகளும் பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.அத்துடன் சிறிது பச்சை கொத்தமல்லிதழை ,உப்பு மற்றும் மிளகாய் தூள் சிறிது சேர்த்து அனைத்தையும் கோதுமை மாவில் கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து சிறிது நேரம் ஊறவிட்டு சப்பாத்திகள் செய்யலாம்.

முடக்கத்தான் கீரை தோசை

already seen this












முடக்கத்தான் கீரை சுத்தம் செய்து அத்துடன் சிறிது மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்...புதிதாக அரைத்த இட்லி மாவு நம் தேவைக்கு ஏற்ப தனியே எடுத்து அத்துடன் அரைத்த கீரையை கலந்து அதில் சிறிது ,சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்...மறுநாள் காலை தோசை செய்து சாப்பிட , சுவையாக இருக்கும்...மிளகாய் சட்னி இதற்கு தொட்டுக்கொள்ள மேலும் சுவை கூட்டும்.