புதன், 3 செப்டம்பர், 2014

முட்டை குழம்பு

already seen this







சின்ன வெங்காயம் -1/2 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன் 
பூண்டு - 4 அல்லது 5 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
முட்டை - 5 அல்லது 6

தேங்காய் துருவலை மிக்ஸியில் நன்கு மசிய அரைத்து பின் அதனுடன் 5 சின்ன வெங்காயம் , 5 பூண்டு பல் சேர்த்து ஒன்றுக்கு பாதியாக அரைத்து எடுக்கவும்.
பின்பு அந்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் புளி கரைத்து அதன் சாறு சேர்க்கவும்....அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணை சேர்த்து ,அது காய்ந்ததும் கறிவடகம் சேர்க்கவும்..பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கலந்து வைத்துள்ள புளி கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.மற்றொரு அடுப்பில் ஒரு சிறு கைப்பிடி உள்ள கடாயில் சிறிது எண்ணை விட்டு அதில் ஒரு முட்டை ஊற்றி வேக விடவும்.லேசாக வெந்ததும் மெதுவாக அந்த முட்டையை குழம்பில் சேர்க்கவும்.இப்படி ஒவ்வொரு முட்டையும் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

1 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

வலைச்சர தள இணைப்பு : வலைப்பூக்கள் பலவிதம்